திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!

கூட்டணி வேட்பாளர் ஆறுமுகத்துக்கு ஆதரவாக நடிகரும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்!
 

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் பல்வேறு வேட்பாளர்களையும், தேர்தல் அறிக்கையையும் வெளியிடுகின்றனர். தமிழகத்தில் மிகவும் பழமையான திராவிட முன்னேற்றக் கழகம் ஆனது தனது வேட்பாளர், தேர்தல் அறிக்கை வெளியிட்டது.

dmk

அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.  நடிகரும், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின்  சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக போட்டியிட உள்ளார். அவர் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியானது. அதற்கான வேட்பு மனுவையும் தாக்கல் செய்தார் .

இந்நிலையில் அவரது கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான ஆறுமுகத்திற்கு ஆதரவாக அவர் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அவர் திறந்த வாகனத்தின் மூலம்மூலம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

From around the web