வீடு திரும்பினார் திமுக பொருளாளர்!தாம்பரத்தில் உள்ள வீட்டில் தனிமை!

கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்ற திமுக பொருளாளர் டி ஆர் பாலு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்!
 
வீடு திரும்பினார் திமுக பொருளாளர்!தாம்பரத்தில் உள்ள வீட்டில் தனிமை!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் அறிவித்திருந்த தேதியின்படி ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது.சட்டமன்ற தேர்தலில் வாக்காளர் அனைவரும் வரிசையில் நின்று வாக்களித்தனர். மேலும் இந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வேட்பாளர்கள் சுயேச்சை வேட்பாளர்கள் என பலரும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.மேலும் பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்தன. அதன்படி தமிழகத்தின் மிகவும் வலிமையான எதிர்க்கட்சியாக உள்ள திமுகவுடன் கூட்டணி ஆக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வைத்து சட்டமன்ற தேர்தலை சந்தித்து உள்ளன.

corona

மேலும் திமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக அக்கட்சியின் தலைவரான மு க ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார் அவர் கடந்த முறை போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தார். அவர் பல்வேறு பகுதிகளில் சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார் .மேலும் திமுகவின் பொருளாளராக டி ஆர் பாலு உள்ளார். அவர் தேர்தலின் போது தனது கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார்.

அவருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. அதனால் அவர் ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில் அவர் தற்போது வீடு திரும்பியதாக தகவல் கூறப்படுகிறது. கொரோனா சிகிச்சை பெற்ற டி ஆர் பாலு கொரோனா  வீரியம் குறைந்து அடுத்து மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி வீடு திரும்பினார் என்ற தகவல் வெளியாகியுள்ளது .மேலும் அவர் சென்னை தாம்பரத்தில் உள்ள வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார் டி ஆர் பாலு.

From around the web