8 மாதத்தில் திமுக ஆட்சிக்கு வரும்: பொதுக்குழுவில் ஸ்டாலின் பேச்சு

இன்னும் 8 மாதத்தில் திமுக ஆட்சிக்கு வரும் என திமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் பேசியுள்ளார்.
 

இன்னும் 8 மாதத்தில் திமுக ஆட்சிக்கு வரும் என திமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் பேசியுள்ளார். மேலும் அவர் கருணாநிதியை நினைவு கூர்ந்து பொதுக்குழுவில் உருக்கமாக பேசியது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. துரைமுருகனும், டி.ஆர்.பாலுவும் திடீரென உயரத்தை எட்டவில்லை என்றும், அண்ணா வகித்த பொதுச்செயலாளர் பதவியை துரைமுருகன் ஏற்றுள்ளார் என்றும் கூறினார். 9 முறை சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட சூப்பர் ஸ்டார் துரைமுருகன் என்றும் அவரை புகழ்ந்தார்.

முன்னதாக திமுக பொதுச்செயலாளர் பதவியை ஏற்றபின்னர் பேசிய துரைமுருகன், ‘என் மறைவிற்கு பிறகும் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியுள்ள குடும்பமாக எனது குடும்பம் இருக்கும் என்றும், திமுகவுக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் என்றும் துரோகம் நினைக்க மாட்டேன் என்றும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசினார். மேலும் முக ஸ்டாலின் தன்னைப்பற்றி புகழ்ந்து பேசும்போது துரைமுருகன் ஆனந்தக்கண்ணீர் வடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் பொருளாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட டி.ஆர்.பாலு குறித்து முக ஸ்டாலின் கூறியபோது, ‘திமுகவின் போர்வாளாக திகழ்கிறார் டி.ஆர்.பாலு என்றும், வெட்டி வா என்றால் கட்டி வரக்கூடியவர் டி.ஆர்.பாலு என கருணாநிதி குறிப்பிடுவார் என்றும்,  மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

From around the web