இந்த பூச்சாண்டிக்கெல்லாம் ஆர்.எஸ்.பாரதி அஞ்சமாட்டார்: திமுக பிரமுகர் பரந்தாமன்

சென்னையில் இன்று அதிகாலை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை போலீசார் கைது செய்த நிலையில் அவரது கைதுக்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் திமுக பிரமுகர் பரந்தாமன் இதுகுறித்து கூறுகையில், ‘இது நிச்சயம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைதான். இதை திமுக சட்டரீதியாக சந்திக்கும். பல்வேறு சிறைச்சாலைகளை கண்டவர்தான் ஆர்.எஸ்.பாரதி. இதுபோன்ற பூச்சாண்டிக்கெல்லாம் அவர் அஞ்சமாட்டார். திமுகவும் பயப்படாது. கொரோனா வைரஸ் தாக்கியிருக்க்குமோ என்ற சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் அவரை சிறையில் அடைத்தால் நாளை
 

இந்த பூச்சாண்டிக்கெல்லாம் ஆர்.எஸ்.பாரதி அஞ்சமாட்டார்: திமுக பிரமுகர் பரந்தாமன்

சென்னையில் இன்று அதிகாலை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை போலீசார் கைது செய்த நிலையில் அவரது கைதுக்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் திமுக பிரமுகர் பரந்தாமன் இதுகுறித்து கூறுகையில், ‘இது நிச்சயம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைதான். இதை திமுக சட்டரீதியாக சந்திக்கும். பல்வேறு சிறைச்சாலைகளை கண்டவர்தான் ஆர்.எஸ்.பாரதி. இதுபோன்ற பூச்சாண்டிக்கெல்லாம் அவர் அஞ்சமாட்டார். திமுகவும் பயப்படாது. கொரோனா வைரஸ் தாக்கியிருக்க்குமோ என்ற சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் அவரை சிறையில் அடைத்தால் நாளை அவர் உயிருக்கு அரசாங்கத்தால் பாதுகாப்பு கொடுக்க முடியுமா? என கேள்வி எழுப்பினார்

மேலும் மார்ச் 13 ஆம் தேதி வழக்குப்பதிவு செய்து தற்போது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு காலம் கடந்து இப்போது கைது நடவடிக்கையை பார்க்கும்போது உள்நோக்கத்துடன் தான் இது நடந்துள்ளது. தலைமறைவு குற்றவாளிபோல் அவரை நடத்தி வருகின்றனர் என்று கூறியுள்ளார்.

From around the web