திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா 

 

தமிழகத்தில் சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் ஒவ்வொரு நாளும் கொரோனாவால் சுமார் 5ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்

கொரோனாவால் அப்பாவி பொதுமக்களுக்கு மட்டுமன்றி விஐபிக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த ஒருசில எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அமைச்சர்கள் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் இதில் ஒருசிலர் கொரோனாவால் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கொரோனாவால் உறுதி செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதி  ஆதம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

From around the web