திமுக எம்.பி. கதிர் ஆனந்த் மிரட்டப்பட்டாரா? 

 

திமுக எம்பி கதிர் ஆனந்த் என்னை புலனாய்வு பிரிவினர் என்று கூறிக்கொண்டு இரண்டு பேரும் சந்தித்து மிரட்டியதாக திடீரென குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது 

தற்போது பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் மக்களவைத் தலைவரிடம் திமுக எம்பி கதிர் ஆனந்த் திடீரென ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார் 

மக்களவையில் இன்று நான் என்ன பிரச்சனை பற்றி பேசப்போகிறேன் என்று என்னிடம் இரண்டு பேர் கேள்வி எழுப்பியதாகவும் புலனாய்வுப் பிரிவினர் என்று கூறிக் கொண்டு வந்த அந்த இரண்டு பேர் என்னை சந்தித்து மிரட்டியதாகவும் உளவுத்துறையினர் என்று கூறிக்கொண்டு இன்னும் சிலர் தன்னை மிரட்டியதாகவும் வேலூர் திமுக எம்பி கதிர் ஆனந்த் மக்களவை சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளார்

தான் தங்கியிருந்த தமிழ்நாடு இல்லத்தில் அத்துமீறி நுழைந்து புலனாய்வு பிரிவினர் மற்றும் உளவுத்துறையினர் என்று கூறிக் கொண்டு தன்னை மிரட்டியதாக திமுக எம்பி கதிர் ஆனந்த் புகார் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

இதனை அடுத்து திமுக எம்பி கதிர் ஆனந்தை மிரட்டியது யார் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அந்த மர்ம நபரை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் திமுக எம்பிக்கள் ஒட்டுமொத்தமாக குரல் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web