திமுக எம்பி ராசா மிகுந்த மனவருத்தத்தோடு மன்னிப்பு கோரினார்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி காயப் படுத்துவதற்காக மிகுந்த மனவருத்தத்தோடு மன்னிப்பு கோரினார் திமுக எம்பி ராசா!
 

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் பல கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கின்றன. தேர்தலில் 234 தொகுதிகளில் நடைபெற உள்ளது.234 தொகுதிகளிலும் பல கட்சி வேட்பாளர்கள் சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.  ஆளும் கட்சியான அதிமுகவுடன் கூட்டணியாக பாஜக, பாமக போன்ற கட்சிகள் வைத்துள்ளது.

eps

பல தொகுதிகளில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்ட தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். திமுக சார்பில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிவிக்கப்பட்ட நிலையில் அவரும் பல பகுதிகளுக்கு தமிழகத்தின் பல பகுதிகளுக்கு சென்று தேர்தல் பிரச்சாரத்தில் மிக மும்முரமாக இருக்கிறார்.  சில தினங்கள் முன்பு திமுக எம்பி ராசா முதலமைச்சரை பற்றி தாயார் பற்றி அவதூறாக பேசினார்.

நேற்றையதினம் பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மிகவும் மனவேதனை அடைந்து கண்கலங்கினார். இதனால் இன்று செய்தியாளர்களை சந்தித்து திமுக எம்பி ராசா அவர் கூறினார். அடி மனதில் இருந்து வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார். மேலும் முதலமைச்சர் எனது பேச்சால் காயப்பட்டு கண் கலங்கினார் என்ற செய்தி எனக்கு மிகுந்த மன வேதனை அடைந்தேன் எனவும் அவர் கூறினார்.

மேலும் அவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் பற்றி அவதூறாக பேசியதற்காக மன்னிப்பு கோரினார்.இன்னும் ஒரு படி மேலே போய் சொல்வதென்றால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசியல் காரணங்களுக்காக அல்லாமல் உள்ளபடியே காயப்படுத்தி விட்டதாக உணர்வாரேயானால் மன்னிப்பு கேட்பதற்கு எனக்கு சிறிதும் தயக்கம் இல்லை எனவும் அவர் கூறினார்.

From around the web