ஐடி ரெய்டு  எங்களிடம் செல்லாது என்று கூறும் திமுக எம்பி கனிமொழி!

வருமானவரி சோதனை குறித்து ஆலங்குளத்தில் திமுக எம்பி கனிமொழி பேச்சு!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன.இந்த 234 தொகுதிகளிலும் பல கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலரும் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் ஆளும் கட்சியான அதிமுகவுடன் கூட்டணியாக பாஜக கட்சியையும் ,பாமக கட்சியும் வைத்து தேர்தலை சந்திக்க உள்ளன.

incometax

தமிழகத்தில்  திமுகவுடன் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளை வைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன. இந்நிலையில் திமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார். அவர் தமிழகம் அனைத்து பகுதிகளுக்கும் சென்று தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.  திமுக சார்பில் எம்பியாக உள்ள கனிமொழியும் திமுக கட்சி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

 சில தினங்களாக திமுக வேட்பாளர்கள் சிலரின் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.. திமுக தொண்டர்கள் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இது குறித்து திமுக எம்பி கனிமொழி ஆலங்குளத்தில் கூறியுள்ளார். ஐடி ரெய்டு எங்களிடம் செல்லாது எங்களை முடக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். ஐடி ரெய்டு வந்தால் பத்து மடங்கு கூடுதலாக எங்கள் வேலை செய்யத் தூண்டும் எனவும் அவர் ஆலங்குளத்தில் கூறியுள்ளார்.

From around the web