அம்பேத்கரின் சிந்தனைகள் இன்றி அமையாது -திமுக எம்பி புகழாரம்!

அம்பேத்கரின் சிந்தனைகள் இன்றியமையாதது என்று கூறும் திமுகவின் எம்பியான கனிமொழி!
 
அம்பேத்கரின் சிந்தனைகள் இன்றி அமையாது -திமுக எம்பி புகழாரம்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஆனது முன்னதாக அறிவித்து இந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. மேலும் தமிழகத்தில் ஒரே கட்டமாக 234 தொகுதிகளிலும் வாக்கு பதிவானது நிறைவுபெற்றது .இந்நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகவும் பாதுகாப்பான மத்தியில் கண்காணிப்புடன் கவனிக்கப்படுகிறது. இந்த சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் அதிகம் வேட்புமனு தாக்கல் செய்திருப்பதாக தகவல். மேலும்  சட்டமன்ற தேர்தலில் புதிது புதிதாக கூட்டணி கட்சிகள் களம் இறங்கி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

kanimozhi

அதன்படி தமிழகத்தில் மிகவும் வலிமையான எதிர் கட்சியாக உள்ள திமுக கட்சியானது தன்னுடன் கூட்டணியாக தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை வைத்து சட்டமன்ற தேர்தலை சந்தித்து உள்ளது. மேலும் திமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார். கடந்த முறை போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் மீண்டும் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் தேர்தல் முடிந்த பின்னர் திமுகவின் ஒருசில வேட்பாளருக்கு கொரோனா கண்டறியப்பட்டது.

அதன்படி காட்பாடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட துரைமுருகனுக்கு கொரோனா கண்டறியப்பட்டது. மேலும் தேர்தலுக்கு முன்னரே திமுக எம்பி கனிமொழி கொரோனா கண்டறியப்பட்டது. மேலும் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றார். மேலும் அவர் மேற்கொள்ள இருந்த பிரச்சாரங்களும் ரத்து செய்யப்பட்டது. தற்போது கனிமொழி கூறியுள்ளார் அம்பேத்கரின் சிந்தனைகள் இன்றியமையாதது என்றும் கூறியுள்ளார். மேலும் உரிமைகள் ஒடுக்கப்படும் இக்காலத்திலும் அவரின் சிந்தனைகள் இன்றியமையாததாக உள்ளதாக திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார். இன்றைய தினம் அம்பேத்கரின் பிறந்தநாள் நாடெங்கும் கொண்டாடப்பட்டு அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web