திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம் சஸ்பெண்ட்: பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்!

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் அவர்கள் நேற்று பாஜகவில் சேரப்போவதாக வெளிவந்துள்ள தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று மாலை பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா அவர்களை கு.க.செல்வம் சந்தித்ததாகவும் செய்திகள் உறுதி செய்யப்பட்டது ஆனால் இது குறித்து கருத்து தெரிவித்த கு.க.செல்வம், தான் பாஜகவில் இணைய இல்லை என்றும் தனது தொகுதி மேம்பாட்டுக்காக பேச்சுவார்த்தை நடத்தவே மத்திய அமைச்சர் மற்றும் ஜேபி நட்டா அவர்களை சந்தித்ததாகவும் தெரிவித்திருந்தார் மேலும் ஸ்டாலின்
 

திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம் சஸ்பெண்ட்: பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்!

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் அவர்கள் நேற்று பாஜகவில் சேரப்போவதாக வெளிவந்துள்ள தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று மாலை பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா அவர்களை கு.க.செல்வம் சந்தித்ததாகவும் செய்திகள் உறுதி செய்யப்பட்டது

ஆனால் இது குறித்து கருத்து தெரிவித்த கு.க.செல்வம், தான் பாஜகவில் இணைய இல்லை என்றும் தனது தொகுதி மேம்பாட்டுக்காக பேச்சுவார்த்தை நடத்தவே மத்திய அமைச்சர் மற்றும் ஜேபி நட்டா அவர்களை சந்தித்ததாகவும் தெரிவித்திருந்தார்

மேலும் ஸ்டாலின் குறித்தும் அவர் சில கடுமையான விமர்சனங்களை செய்திருந்தார். கந்த சஷ்டி கவசம் குறித்து விமர்சனம் செய்தவர்களை ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதனால் திமுகவில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது

இதனை அடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் அவசர ஆலோசனை செய்தார். இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி திமுகவில் இருந்து சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ செல்வம் அவர்கள் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி திமுகவில் கு.க.செல்வம் வகித்து வந்த பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web