புதுச்சேரியில் திமுக எம்.எல்.ஏ ஒருவரும் ராஜினாமா: நாளை என்ன நடக்கும்?

 

புதுவையில் கடந்த சில நாட்களில் 4 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திடீர் திடீரென ராஜினாமா செய்த நிலையில் சில மணி நேரங்களுக்கு முன்னர் காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் என்பவர் தனது பதவியை ராஜினாமா செய்தார் 

அவர் சபாநாயகரை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்ல் காங்கிரஸ் கட்சியில் தனக்கு மரியாதை இல்லை என்பதால் ராஜினாமா செய்வதாக கூறினார். இதனை அடுத்து மொத்தம் ஐந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 

pudhuvai

இந்த நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணனை அடுத்து திமுக எம்எல்ஏ வெங்கடேசன் என்பவர் திடீரென ராஜினாமா செய்துள்ளார். இவர் சற்று முன்னர் சபாநாயகர் சிவக்கொழுந்து அவர்களை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது 

இதனை அடுத்து புதுச்சேரி மாநில காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணியின் பலம் 12 ஆக குறைந்துள்ளது, நாளை மாலை 5 மணிக்குள் தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என புதுவை ஆளுநரும் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் முதல்வர் நாராயணசாமிக்கு உத்தரவிட்டிருக்கும் நிலையில் தொடர்ச்சியாக புதுச்சேரியில் ராஜினாமா அரங்கேறி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web