பிறந்த நாளில் உயிரிழந்த ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ

சென்னை சேப்பாக்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் சற்றுமுன் காலமானார். அவருக்கு வயது 62. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்ட எம்.எல்.ஏ அன்பழகன் அவர்கள் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 2-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது இந்த நிலைய்ல் ஜெ.அன்பழகன் அவர்களுக்கு தொடர்ந்து மூச்சுத்திணறல் அதிகரித்ததன் காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வந்தாலும் அவரது உடல் கவலைக்கிடமாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை
 

சென்னை சேப்பாக்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் சற்றுமுன் காலமானார். அவருக்கு வயது 62.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்ட எம்.எல்.ஏ அன்பழகன் அவர்கள் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 2-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது

இந்த நிலைய்ல் ஜெ.அன்பழகன் அவர்களுக்கு தொடர்ந்து மூச்சுத்திணறல் அதிகரித்ததன் காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வந்தாலும் அவரது உடல் கவலைக்கிடமாக இருந்தது.

இந்த நிலையில் இன்று காலை ஜெ.அன்பழகன் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூன் 10ஆம் தேதியான இன்றுதான் அவரது பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெ.அன்பழகன் அவர்கள் கடந்த 2001, 2011, 2016, சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த ஜெ.அன்பழகனுக்கு திமுகவினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

From around the web