"திமுக என்றால் அராஜகம் அதிமுக என்றால் அமைதி"- முதல்வர்!

 அதிமுக வானது அமைதியான ஆட்சியை தருகிறோம் என்று கூறும் முதல்வர்!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக தமிழகத்தில் வேலைப்பாடுகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் மத்தியில் தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள அதிமுக கட்சி கூட்டணியாக பாஜக மற்றும் பாமக கட்சி வைத்துள்ளது. அதற்காக பாஜக கட்சிக்கு 20 தொகுதிகளும், பாமகவிற்கு 23 தொகுதிகளும் அதிமுக தரப்பில் இருந்து ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் பல கட்சி வேட்பாளர்கள்  வேட்பு மனுவையும் தாக்கல் செய்திருந்தனர்.

admk

மேலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் அதிமுகவில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். மேலும் அவர் கடந்த முறை போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் மீண்டும் போட்டியிட உள்ளதாகவும் அதிலே தன் வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிக்கும் சென்று தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்.

மேலும் அவர் கூறினார் திமுக என்றால் அராஜகம் என்றும் அதிமுக என்றால் அமைதி என்றும் கூறியுள்ளார். இதனால் அதிமுக ஆட்சியில் அமைதியான ஆட்சியை தருவோம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மேலும் நிம்மதியான வாழ்வு தொடரவேண்டும் என்றால் மீண்டும் அதிமுகவுக்கு மக்கள் ஆதரவு தரவேண்டும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மேலும் நாட்டிலேயே மிக மோசமான கட்சி என்றால் அது திராவிட முன்னேற்ற கழகம் தான் என்றும் திமுக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

From around the web