கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்… அதிமுகவை சாடிய தேமுதிக தலைவர் விஜயகாந்த்!!

கொரோனா ஊரடங்கால் மார்ச் மாதம் முதல் பள்ளிகள் நடைபெறாமல் இருந்தநிலையில் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என மாணவர்களும் பெற்றோர்களும் தவித்து வந்தனர். அந்தவகையில், ஜூன் 1 அன்று தேர்வுகள் துவங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வராததால் கொண்டு தேர்வு ஜூன் 15 க்கு ஒத்திவைக்கப்பட்டன. இந்தநிலையில் இன்று தமிழக முதலமைச்சர் பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்ததையடுத்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்
 
கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்… அதிமுகவை சாடிய தேமுதிக தலைவர் விஜயகாந்த்!!

கொரோனா ஊரடங்கால் மார்ச் மாதம் முதல் பள்ளிகள் நடைபெறாமல் இருந்தநிலையில் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என மாணவர்களும் பெற்றோர்களும் தவித்து வந்தனர். அந்தவகையில், ஜூன் 1 அன்று தேர்வுகள் துவங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வராததால் கொண்டு தேர்வு ஜூன் 15 க்கு ஒத்திவைக்கப்பட்டன.

இந்தநிலையில் இன்று தமிழக முதலமைச்சர் பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்ததையடுத்து,  தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்… அதிமுகவை சாடிய தேமுதிக தலைவர் விஜயகாந்த்!!

அதாவது அவர் ட்விட்டரில், “அரசாங்கம் எந்தவொரு விஷயத்திலும் எடுக்கும் முடிவுகளில் உறுதியாக இருத்தல் வேண்டும், குழப்பமான முடிவுகளை எடுத்து மாணவர்களையும் பெற்றோரையும் தவிக்க விட்டது மட்டுமல்லாது பெரிய அளவில் விரய செலவுகளும் ஏற்பட்டுள்ளது.

ஐகோர்ட் கண்டனம் மற்றும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பிற்குப் பின்னர் இந்த முடிவினை எடுத்ததைவிட, முன்பே நன்கு ஆலோசித்து இம்முடிவினை எடுத்து இருக்கலாம்.

ஹால் டிக்கெட், தேர்வு மையங்கள், ஹால் டிக்கெட் வாங்க சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு என பல தேவையற்ற விரய செலவுகளைச் செய்தபின்னர் எடுக்கப்பட்ட இம்முடிவு கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பதுபோல் உள்ளது, இதுபோன்ற காலம் கடந்த முடிவுகளை நாங்கள் வரவேற்க மாட்டோம்” என்று கூறியுள்ளார்.

From around the web