தேர்தல் ஆணையத்திற்கு நடுநிலைமை தேவை திமுக தலைவர் வலியுறுத்தல்!

தேர்தல் ஆணையம்  பாரபட்சமின்றி அனைத்து கட்சிகளிடமும் நடுநிலைமையுடன் நடந்து கொள்ள வேண்டும் என திமுக தலைவர் வலியுறுத்தல்!
 
தேர்தல் ஆணையத்திற்கு நடுநிலைமை தேவை திமுக தலைவர் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு முன் கூட்டியே அறிவித்திருந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. மேலும் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது.மேலும் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும் வாக்காளர் அனைவரும் வரிசையில் நின்று சமூக இடைவெளியை கடைபிடித்து வாக்களித்து ஜனநாயக கடமையாற்றினார். வாக்காளர் அனைவருக்கும் பாதுகாக்கும்  முகக்கவசம்  போன்றவகள் கொடுக்கப்பட்டன.

election

  வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 12 மணி நேரங்களாக நடைபெற்றது. திமுக கட்சி சார்பில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் கடந்த தேர்தலில் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் மீண்டும் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். மேலும் திமுக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலை சந்தித்தன.மேலும் வாக்கு பதிவானது நிறைவு பெற்ற நிலையில் பார்க்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் கண்காணிக்க மத்தியில் உள்ளது.

தற்போது திமுக தலைவர் மு க ஸ்டாலின் தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன்படி இந்திய தேர்தல் ஆணையம் ஆனது பாரபட்சமின்றி நடுவு நிலைமையுடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் அனைத்து கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் சமநிலையில் போட்டியிடும் சூழலை ஆணையம் உறுதிப்படுத்த வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

From around the web