பாமக ஆதரவாளரை திமுக பிரமுகர் கத்தியால் தாக்கினார்! பாமகவினர் போராட்டம்!

ஆத்தூர் தொகுதி வேட்பாளர் திலகபாமா உள்ளிட்ட பாமக கட்சியினர் சாலையில் போராட்டம்!
 

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் பல கட்சிகளுடன் கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன. மேலும் தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள அதிமுக கட்சியானது  கூட்டணியாக பாஜக கட்சியை வைத்துள்ளது. மேலும் பாட்டாளி மக்கள் கட்சி என்று அழைக்கப்படும் பாமக கட்சி இணையும் அதிமுக கட்சி கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது.

pmk

இதற்கு அதிமுகவினர் 23 தொகுதிகளை பாமக கட்சிக்கு ஒதுக்கி உள்ளனர். இந்நிலையில் பாமக சார்பில் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் திலகபாமா. திண்டுக்கல் மாவட்டம் கூத்தம்பட்டி பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார். அப்போது பாமக உறுப்பினர் ஹக்கீம் என்பவரை திமுக பிரமுகர் ஒருவர் கத்தியால் தாக்கினார்.

இதனால் பாமகவினர் சாலை மறியலில் சாலையில் அமர்ந்தபடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் திமுக பிரமுகரை கைது செய்ய வேண்டும் எனவும் ஆத்தூர் தொகுதி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திலகபாமா மற்றும் பாமக கட்சியினர் சாலையில் அமர்ந்தபடி கோஷங்கள் எழுப்பி கொண்டுள்ளனர்.இதனால் அப்பகுதியில் மிகவும் பரபரப்பான நிலை நிலவுகிறது.

From around the web