திமுக ஆட்சி பிறகு ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாது-திமுக தலைவர் உறுதி!

திமுக ஆட்சி அமைத்த பிறகே எந்த சூழலிலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கப்படாது என உறுதியளித்துள்ளார் திமுக தலைவர் மு க ஸ்டாலின்!
 
திமுக ஆட்சி பிறகு ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாது-திமுக தலைவர் உறுதி!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. சட்டமன்றத் தேர்தலில் திமுக கட்சியானது கூட்டணியோடு களமிறங்கி இருந்தன. திமுக சார்பில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார். மேலும் அவர் கொளத்தூர் தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்து தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். மேலும் அவர் தனது கூட்டணி மற்றும் தன் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில் தற்போது திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஸ்டெர்லைட் ஆலை குறித்து சில தகவல்களையும் கருத்துகளையும் கூறியுள்ளார்.sterlite

அதன்படி அவர் மருத்துவ ஆக்சிசனை உற்பத்திக்காக மட்டுமே ஸ்டெர்லைட்டை திறக்கலாம் என அரசு முடிவெடுத்துள்ளது என்று கூறியுள்ளார்.மேலும் திமுக ஆட்சி அமைத்த பிறகு எந்த ஒரு சூழலிலும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாது என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். மேலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற தமிழக அரசின் முடிவு தற்போது தற்காலிகமானது தான் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் வேறு எந்த பதிலும் ஸ்டெர்லைட் ஆலையை இயக்கக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

மாவட்ட ஆட்சியர், எஸ் பி, மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரி தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என்றும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் இந்த குழுவில் தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் போராட்டக் குழு சுற்றுச்சூழல் அமைப்பு பிரதிநிதிகள் இடம் பெற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அனுமதியை முன்னுதாரணமாக வைத்து ஆலையை நிரந்தரமாக திறக்க அனுமதிக்க கூடாது என்றும் திமுக திட்டவட்டமாக கூறியுள்ளார். ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிஜனை தமிழக மக்களுக்கு தேவையான அளவு இலவசமாகஅளிக்க வேண்டும் என்றும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் உற்பத்திக்கு ஸ்டெர்லைட் ஆலையின் சொந்த மின்சாரத்தை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

From around the web