வைகோவை தொடர்ந்து திமுக தலைவரும் கோயம்பேட்டில் அம்பேத்கருக்கு மரியாதை!

அம்பேத்கர் பிறந்த நாளை ஒட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை!
 
வைகோவை தொடர்ந்து திமுக தலைவரும் கோயம்பேட்டில் அம்பேத்கருக்கு மரியாதை!

இந்தியா சுதந்திரம் அடைந்து பல வருடங்கள் ஆயினும் இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் ஜாதி வாரியாகவும் இனம் வாரியாகவும் மொழி வாரியாகவும் ஒடுக்கப்படுகிறது வேதனை அளிக்கிறது. இந்நிலையில் சுதந்திர இந்தியாவில் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்குரலாக டாக்டர் அம்பேத்கார். அவர் பள்ளிப்பருவத்தில் முதலில் ஒடுக்கப்பட்டு வந்ததால் படித்து தனது கனவை நிறைவேற்றினார். மேலும் அவர் சட்டமாமேதை என்றும் அழைக்கப்பட்டார். மேலும் இந்திய அரசமைப்பின் தந்தை என்றும் டாக்டர் அம்பேத்கர் அழைக்கப்பட்டார். மேலும் இந்திய அரசியல் சட்டத்தை வகுத்தவர் இவரே ஆவார்.

stalin

இவ்வளவு சிறப்பு பெற்ற இவருக்கு இன்றைய தினம் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. அதன் மத்தியில் தமிழ்நாட்டில் இன்றைய தினம் இவருக்கு மரியாதை செலுத்தப்படுகின்றன. மேலும் காலை முதலே தமிழகத்தில் பல கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். மேலும் துணை முதல்வர் ஓபிஎஸ் கோட்டூர் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 தற்போது திமுக தலைவர் மு க ஸ்டாலின் சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உள்ளதாக தகவல். மேலும் அவர் அம்பேத்கர் வழியில் தமிழக மக்களுக்கு திமுக கட்சியானது நிச்சயம் கடமையாற்றும் என்றும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் டாக்டர் அம்பேத்கார் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார் திமுக தலைவர் மு க ஸ்டாலின். மேலும் இந்த கோயம்பேட்டில் காலையில் திமுகவின் கூட்டணி கட்சியான மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

From around the web