ஏணி சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் திமுக தலைவர்!

வாணியம்பாடியில் நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் திமுக தலைவர் மு க ஸ்டாலின்!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கஉள்ளது. ஆளும் கட்சியான அதிமுக கட்சி கூட்டணியாக பாமக, பாஜக போன்ற கட்சிகளை வைத்துள்ளது. இதற்கு போட்டியாக இதற்கு வலுவாக தமிழகத்தில் எதிர்க்கட்சியாக உள்ள திமுக கட்சி அவர்களுடன் கூட்டணியாக காங்கிரஸ் ,கம்யூனிஸ்ட், மதிமுக போன்ற கட்சிகளை வைத்துள்ளது.

iuml

திமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் திமுக தலைவர் மு க ஸ்டாலின். அவர் மீண்டும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மு க ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சென்று தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். கூட்டணி கட்சியாக உள்ள முஸ்லிம் இந்திய முஸ்லிம் லீக் கட்சிக்கு வாக்கு சேகரிக்க பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவர் தற்போது வாணியம்பாடியில் வீடு வீடாக நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். மேலும் இந்திய முஸ்லீம் லீக் கட்சிக்கு ஏணி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏணி சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் மு க ஸ்டாலின்.இதுபோன்று தி மு க ஸ்டாலின் தமிழகத்தில்  உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று தனது கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web