மக்கள் நலன் காக்கும் ஒன்றிணைவோம் அழைப்பு விடுத்த திமுக தலைவர்!

மக்கள் நலன் காக்க பணியாற்றுமாறு ஒன்றிணைவோம் வா என்று அழைப்பு விடுத்துள்ளார் திமுக தலைவர் மு க ஸ்டாலின்!
 
மக்கள் நலன் காக்கும் ஒன்றிணைவோம் அழைப்பு விடுத்த திமுக தலைவர்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஆனது ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது. தமிழகத்திலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும் வாக்குப் பதிவு இயந்திரங்கள தற்போது கவனமாக பாதுகாப்புடன் உள்ளது.தமிழகத்தில் சில தினங்களாக கொரோனா பாதிப்பானது தலைவிரித்தாடுகிறது .இதனால் மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். மேலும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் குறிப்பாக தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கொரோனா தாக்கமானது மிகவும் அதிகரித்துள்ளது.

corona

தமிழகத்தில் ஊரடங்கு போடலாம் என்று மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எனில் கடந்த முறை போடப்பட்ட ஊரடங்கு காரணமாக மக்களின் வாழ்வாதாரங்கள் மிகவும் பாதிக்கப்பட்டது. மேலும் பலருக்கு வேலைகள் இல்லாமல் போயின .தற்போது கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள மு க ஸ்டாலின் தற்போது தொண்டர்களுக்கு மக்கள் நலன் காக்க ஒன்றிய கூறியுள்ளார். மேலும் அவர் மக்களுக்காக பணியாற்ற மாறு ஒன்றிணைவோம் வா எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.

கொரோனா இரண்டாவது அலை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திமுகவினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் , கிருமிநாசினி வழங்க திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மேலும் கோடையில் மக்களின் தாகம் தணிக்க திமுக சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கவும் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு கொரோனா பேரிடரால் தவித்த மக்களுக்கு திமுக உதவியதை நினைவூட்டி தற்போது திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் நல்ல தீர்ப்பு வரும் நிச்சயம் வரும் எனினும் அது வரை காத்திருக்காமல் மக்கள் பணியை தொடர ஒன்று இணைவோம் வாருங்கள் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

From around the web