பலூன்கள் பறக்க விட்டு பிரச்சாரத்தில் ஈடுபடும் திமுக!

திருச்சி திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து நாடாளுமன்ற எம்பி கனிமொழி பிரச்சாரம்!
 

சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக தமிழகத்தில் பல்வேறு ஏற்பாடுகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் பல கட்சிகளுடன் கூட்டணி யில் சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன. அதன் மத்தியில் தமிழகத்தின் மிகவும் வலிமையான எதிர்க்கட்சியாக உள்ள திமுக கட்சி அதனுடன் கூட்டணியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியையும் மதிமுக கட்சியையும் வைத்துள்ளது. மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் காங்கிரஸ் கட்சியையும் கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது திராவிட முன்னேற்றக் கழகம்.

dmk

திராவிட முன்னேற்றக் கழகத்தில் முதலமைச்சர் வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் மு க ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தாக்கல் செய்து உள்ளார். ஸ்டாலின் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவர் மட்டுமின்றி திமுக வேட்பாளர்கள் பலரும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தப்படி திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அன்பின் பொய்யா மொழியை ஆதரித்து நாடாளுமன்ற எம்பி கனிமொழி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். மேலும் அவர் சிவப்பு மற்றும் கருப்பு நிற பலூன்களை வானத்தில் பறக்க விடும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். திருச்சி பொன்மலை பட்டியில் திறந்த வாகனத்தில் மூலம் கனிமொழி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார் .மேலும் தமிழகத்தின் உரிமைகளை பாஜகவிடம் அடகு வைத்து விட்டது அதிமுக எனவும் கூறியுள்ளார். முதியோர் உதவித் தொகை அல்லது 1500 ஆக உயர்த்தி வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

From around the web