தொடரும் ஐடி ரெய்டு!"சாலை மறியல்" போராட்டத்தில் திமுகவினர்!

இன்று காலையில் ஸ்டாலின் மகள் வீட்டில் ஐடி ரெய்டு நடந்ததால் திமுகவினர் போராட்டம்!
 
தொடரும் ஐடி ரெய்டு!"சாலை மறியல்" போராட்டத்தில் திமுகவினர்!

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதுக்காக பல்வேறு கட்சிகள் பல கட்சியுடன் கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன. மிகவும் வலிமையான எதிர்க்கட்சியாக உள்ள திமுக உடன் கூட்டணியாக கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளை வைத்து, தேர்தலுக்கான வேட்பாளர்களை கூட்டணி கட்சிகள் அறிவித்து, தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். மேலும் திமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார்.  அவர் தமிழகம் சென்று தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

dmk

மேலும் அவர் கடந்த தேர்தலில் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் மீண்டும் தனது வேட்பு மனு தாக்கல் செய்து தொகுதியில் போட்டியிட உள்ளார். மேலும் அவர் தமிழகத்தில் உள்ள தனது கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், சில தினங்களாக தமிழகத்தில் வருமான வரி சோதனை என்று அழைக்கப்படும் ஐடி ரெய்டு நடைபெற்று வருகிறது. திமுக கட்சியின் வேட்பாளர்கள் சிலரின் வீடுகளிலும் ஐடி ரெய்டு நடக்கிறது.

அந்தப்படி சில தினங்கள் முன்பாக திமுக வேட்பாளர் வேலு வீட்டில் ஐடி ரெய்டு நடைபெற்றது. இன்று காலை முக ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் நடைபெற்றது. இதற்கு எதிராக கண்டனம் தெரிவித்ததாக திமுக உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் திமுக வேட்பாளர் மோகன் மகன் கார்த்திக் வீட்டிலும் சோதனை நடந்தது. மேலும் தொண்டர்கள் கண்டனத்தை தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் சென்னை அண்ணாநகரில் திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.காட்பாடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்  துரைமுருகன்  இதுகுறித்து கருத்து கூறியுள்ளார். திமுக தலைவர் மு க ஸ்டாலின் மகள் வீட்டில் அரசியல் நோக்கத்துடன் தான் சோதனை நடத்தப்படுகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

From around the web