அதிமுக முதல்வர் வேட்பாளர்தொகுதியில் திமுகவும், திமுக முதல்வர் வேட்பாளர்தொகுதியில் அதிமுக வும் மாறி மாறி பிரச்சாரம்!

அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக முதல்வர் வேட்பாளர் மு க ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி இல்லாமல் 234 தொகுதிகளில் தனது கட்சி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது நாம் தமிழர் கட்சி. இதனை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.  இந்நிலையில் தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக கட்சி தன்னுடன் கூட்டணியாக பாஜக பாமக போன்ற கட்சிகளை வைத்து சந்திக்க உள்ளது. மேலும் தமிழகத்தின் எதிர்கட்சியான திமுக கட்சியுடன் கூட்டணி ஆக காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக போன்ற கட்சிகளை வைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி மீண்டும் அறிவிக்கப்பட்டார்.

 dmk admk

 திமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக மு க ஸ்டாலின்அறிவிக்கபட்டார். இந்நிலையில் அவர் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியது. திமுக தலைவர் மு க ஸ்டாலின் தமிழக முதல்வர் போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் சம்பத்குமார் ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் சென்றுள்ளார். அவர் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார்.

மேலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியிலும் சென்று அதிமுக வேட்பாளர் ஆதி ராஜாராமுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் கொளத்தூரில் ஸ்டாலின் தான் ஜெயிக்க முடியும் என்ற மாயை திமுக உருவாக்கியுள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் கூறினார்.

From around the web