ஒரு தலைமுறையையே கெடுத்துவிட்டது திமுக: இல கணேசன் அதிர்ச்சி குற்றச்சாட்டு

 

தமிழ்நாட்டில் உள்ள ஒரு தலைமுறைக்கு தமிழும் தெரியாமல் இந்தியும் தெரியாமல் ஒரு தலைமுறையையே கெடுத்து விட்டது திமுக என இல கணேசன் குற்றம்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

தி நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இல கணேசன் கூறியதாவது: தமிழ் வாழ்க என டி ஷர்ட் போட்டு கொண்டால் மட்டும் தமிழ் வளர்ந்து விடுமா? இந்தியும் தெரியாமல் தமிழும் தெரியாமல் ஒரு தலைமுறை உருவாகி இருப்பதற்கு காரணம் திமுகதான் என்று கூறினார்.

மேலும் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் அம்மாநில சட்ட ஒழுங்கை சரியாக கையாண்டு வருகிறார் பாலியல் வன்கொடுமைக்கு காரணமானவர்கள் மீது யாருமே எதிர்பார்க்காத வகையில் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கண்டிப்பாக அவர் குற்றவாளிகளை கூண்டில் ஏற்றுவார். ஆனால் உத்தரப் பிரதேச மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக ராகுல்காந்தி கீழே விழுவதுபோல் நாடகமாடுகிறார் என்று உபி விவகாரம் குறித்து கூறினார்.,

மேலும் அதிமுகவில் தற்போது நிலவிவரும் குழப்பங்கள் அனைத்து கட்சிகளிலும் வரக்கூடிய ஒரு சாதாரண குழப்பங்கள்தான் என்றும் இதனால் காட்சி உடையாது என்றும் குழப்பங்களை அக்கட்சியில் உள்ள தலைவர்கள் சரிசெய்துவிடுவார்கள் என்றும் அவர் கூறினார்

மேலும் தமிழகத்திலிருந்து ஏற்கனவே தேசிய அளவில் ஐந்து தமிழர்கள் பாஜகவில் பதவியில் இருக்கின்றார்கள் என்றும் ஹெச்.ராஜாவின் திறமைக்கு விரைவில் சரியான அங்கீகாரம் கிடைக்கும் என்றும் அது அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் செய்தியாக இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

From around the web