"சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல்" காட்பாடியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்!

காட்பாடியில் 15 கோடி ரூபாயில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உருவாக்கப்படும் என திமுக பொதுச்செயலாளர் பிரச்சாரத்தில் கூறினார்!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகையில் அதற்காக தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல்  ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. மேலும்இந்த 234 தொகுதிகளிலும் பல கட்சி வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். மேலும் சுயேச்சை வேட்பாளர்கள் பலரும்  தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

dmk

இந்நிலையில் தமிழகத்தில் மிகவும் வலிமையான எதிர்க்கட்சியாக உள்ள திராவிட முன்னேற்ற கழகம் ஆனது கூட்டணியாக  காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக போன்ற கட்சிகளை வைத்துள்ளது. திமுக தலைவர் மு க ஸ்டாலின் திமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மேலும் அவர் கொளத்தூர் தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

மேலும் திமுக கழக பொதுச்செயலாளர் துரைமுருகன் காட்பாடி தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார் . காட்பாடி பல பகுதிகளில் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். மேலும் அவர் வாகனத்தின் மூலம் காட்பாடியில் உள்ள எம்ஜிஆர் நகர், நேரு தெரு போன்ற பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறினார் காட்பாடியில் 15 கோடி ரூபாய் மதிப்பில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் உருவாக்கப்படும் என்றும் கூறினார். இந்த மருத்துவமனையில் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் எனவும் அவர் வாக்குறுதி கொடுத்தார்.

From around the web