திமுகவின் புதிய பொதுச்செயலாளர், பொருளாளர் யார்? 9ஆம் தேதி பொதுக்குழு கூட்டம்

திமுக பொதுச்செயலாளராக இருந்த க.அன்பழகன் அவர்கள் காலமாகி விட்டதை அடுத்து புதிய பொதுச்செயலாளர் தேர்வு செய்யும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் புதிய பொதுச்செயலாளர் தேர்வு செய்யும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது இந்த நிலையில் வரும் 9-ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் காலை 10 மணிக்கு கூட இருப்பதாகவும் காணொலி காட்சி மூலம் நடைபெறும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் கழக பொதுக்குழு
 

திமுகவின் புதிய பொதுச்செயலாளர், பொருளாளர் யார்? 9ஆம் தேதி பொதுக்குழு கூட்டம்

திமுக பொதுச்செயலாளராக இருந்த க.அன்பழகன் அவர்கள் காலமாகி விட்டதை அடுத்து புதிய பொதுச்செயலாளர் தேர்வு செய்யும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் புதிய பொதுச்செயலாளர் தேர்வு செய்யும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது

இந்த நிலையில் வரும் 9-ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் காலை 10 மணிக்கு கூட இருப்பதாகவும் காணொலி காட்சி மூலம் நடைபெறும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் கழக பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்

திமுகவின் புதிய பொதுச் செயலாளராக துரைமுருகன் தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவ்வாறு அவர் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டால், அவர் தற்போது வகித்துவரும் பொருளாளர் பதவி என் டிஆர் பாலு அல்லது எ.வ.வேலு ஆகிய இருவரில் ஒருவருக்கு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் பொருளாளர் பதவிக்கு ஆ.ராசா பெயரும் இருப்பதாக கூறப்படுகிறது

இருப்பினும் வரும் 9-ஆம் தேதி கூடவுள்ள திமுக பொதுக்குழு கூட்டத்தில் முறைப்படி திமுகவின் புதிய பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்வு செய்யப்படும்வரை பொறுமை காப்போம். மேலும் நாளை மறுநாள் திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறும் என்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web