எப்படிப்பட்ட கட்சி தற்போது எப்படி இருக்கிறது என திமுகவை முதலமைச்சர் கேள்வி!

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக தமிழகத்தில் பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொள்ள தமிழகத்தில் தேர்தலை சந்திக்க உள்ளனர். தமிழகத்தில் உள்ள பல வேட்பாளர்கள் தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகளில் வேட்பாளர்கள் பலரும் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக கட்சி கூட்டணி பாஜக வைத்துள்ளது. பாஜகவிற்கு அதிமுக தரப்பிலிருந்து 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

அதிமுக சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். அவர் கடந்த முறை போட்டியிட்டு எடப்பாடி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மேலும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மீண்டும் போடிநாயக்கனூர் தொகுதியிலும், கோவில்பட்டி தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜு அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு அவர்கள் தங்களது வேட்பு மனு தாக்கல் செய்து தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.அவர் சென்னை சேப்பாக்கத்தில் தேர்தல் பிரசாரத்தில் கூறினார். திமுக எப்படிப்பட்ட கட்சி தற்போது எப்படி இருக்கிறது என கேள்வி எழுப்பினார். திமுகவில் குடும்பங்கள் மட்டுமே பதவி தருவார்கள் மற்றவர்கள் வீதியில் தான் இருக்க வேண்டும் எனவும் அவர் பிரச்சாரத்தில் கூறினார்.
அதிமுகவில் சாதாரணவர்கள் முதல்வராக வர முடியும் திமுகவில் அப்படி வர முடியுமா? என பிரச்சாரத்தில் முதல்வர் கேள்வி எழுப்பினார். சிறுபான்மை மக்கள் மகிழ்ச்சியுடன் பாதுகாப்பாக இருக்கும் ஒரே மாநிலம் தமிழகம்தான் எனவும் முதல்வர் பழனிசாமி பிரச்சாரத்தில் கூறினார். அதிமுகதான் மக்களுக்கு நன்மை செய்தது பாதுகாக்கின்ற இயக்கம் எனவும் சேப்பாக்கத்தில் முதல்வர் தேர்தல் பரப்புரையில் கூறினார்.