நான் வன்முறையை விரும்பாதவன் என்று கூறும் திமுக வேட்பாளர்!

வன்முறையை தூண்டும் வகையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை பேசி வருகிறார் என்று கூறும் திமுக வேட்பாளர்!
 
நான் வன்முறையை விரும்பாதவன் என்று கூறும் திமுக வேட்பாளர்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இந்த மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்காக தமிழகத்தில் முழுவதும் வேலைப்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் தேர்தல் ஆணையம் ஆனது பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. 234 தொகுதியிலும் பல கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பலரும் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர். மேலும் தமிழகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியாக உள்ளவர் சத்யபிரதா சாகு.

annamalai

தமிழகத்தில் மிகவும் வலிமையான எதிர்க்கட்சியாக உள்ள திமுகவுடன் தேசிய கட்சிகளான காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சியை கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன.  திமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார் அவர் தமிழகம் முழுவதும் சென்று தனது கூட்டணி வேட்பாளர்கள் மற்றும் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

தமிழகத்தில் ஆளும் கட்சியுடன் கூட்டணி மத்தியில் ஆளும் பாஜக கட்சியை வைத்துள்ளது. மேலும் பாஜக சார்பில் அவரகுறிச்சி தொகுதியில் அண்ணாமலை வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார். அவர் பிரச்சாரத்தில் வன்முறையை தூண்டும் விதமாக கூறினார். மேலும் அவர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி குறித்தும் பிரச்சாரத்தில் கூறினார்.

அதற்கு பதில் கூறும் விதமாக திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார் .அவர் நான் வன்முறையை விரும்பாதவன்  என்றும், கடுஞ்சொல் பேசாதவன் என்றும் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். மேலும் வன்முறையை தூண்டும் வகையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை பேசிவருகிறார் என்றும் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

From around the web