வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை என்றால் மக்கள் அளிக்கும் தண்டனையை ஏற்க தயார் என்று கூறும் திமுக வேட்பாளர்!

திமுக சார்பில் பாகூர் தொகுதி திமுக வேட்பாளர் மதியழகன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்!
 

சட்டமன்றத்தேர்தல் நெருங்கிய நிலையில் அதற்காக தமது பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி உள்ளது. மேலும் தமிழகத்தில் மிகவும் வலுமையான  கட்சியாக உள்ள திமுக கட்சி தன்னுடன் கூட்டணியாக மதிமுக கட்சியையும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும், காங்கிரஸ் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் வைத்துள்ளது. மேலும் தொகுதி பங்கீடுகள் பிரிக்கப்பட்டு வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. மேலும் தொகுதி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

dmk

திமுக கட்சி தலைவர் மு க ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியானது.அத்தொகுதியில் அவர் தனது வேட்பு மனுவையும் தாக்கல் செய்தார். தற்போது அவர் தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். திமுக சார்பில் பாகூர் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக மதியழகன் அறிவித்தார்.

தற்போது மதியழகன் அப்பகுதியில் சென்று மக்களை நேரில் சென்று ஆதரவு திரட்டி வருகிறார். அப்போது அப்பகுதி மக்கள் வரிசையாக அவருக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு தந்தனர். மேலும் அப்போது அவர் கூறினார், திமுக ஆட்சிஅமைத்தவுடன் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் எனவும் வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை என்றால் மக்கள் அளிக்கும் தண்டனையை ஏற்க தயார் எனவும் மதியழகன் கூறினார்.

From around the web