அனைத்து சங்கங்களின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டிய திமுக வேட்பாளர்!

திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினரும் திமுக வேட்பாளருமான  ராஜேந்திரன் பேரம்பாக்கம் திருமண மண்டபத்தில் ஆலோசனை!
 

சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. இந்த 234 தொகுதிகளிலும் தேர்தல் வேலைப்பாடுகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தேர்தல் ஆணையம் ஆனது பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. தமிழகத்தில் மிகவும் பழமையான வலிமையான கட்சியாக உள்ள திமுக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி வைத்து சந்திக்க உள்ளன.

dmk

மேலும் திமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார். மேலும் அவர் தமிழகம் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் .இதை தொடர்ந்து திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராக  ராஜேந்திரன் திமுக சார்பில் அறிவிக்கப்பட்டார். திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள பேரம்பாக்கம் பகுதியில் ஒரு திருமண மண்டபத்தில் அனைத்து சங்க நிர்வாகிகளுடன் ஆதரவு திரட்டி கூட்டம் ஒன்றை கூடினார்.

அப்பொழுது அவர் கூறினார் தனது தொகுதியில் தனது சொந்த செலவில் தரை பாலம் ஒன்றே அமைக்கப்பட்டதே நினைவுகூர்ந்தார். மேலும் கடந்த 5 ஆண்டுகளாக தன் பெயரில் கட்ட பஞ்சாயத்து  மற்றும் குற்றமோ வரவில்லை எனவும் அவர் கூறினார். மேலும் அவர் தொகுதிக்கு தொடர்ந்து பணியாற்ற வாய்ப்பு அளிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

From around the web