டீக்கடையில் டீ குடித்து வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்!

பழ வியாபாரி குறையை கேட்டும்  டீக்கடையில் டீ குடித்து வாக்கு சேகரிக்கும் திமுக வேட்பாளர் வேலு!
 
டீக்கடையில் டீ குடித்து வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் பல கட்சிகளுடன் கூட்டணி யில் உள்ளது. மேலும் எதிர்கட்சியான திமுக கட்சி காங்கிரஸ் ,கம்யூனிஸ்ட் ,மதிமுக போன்ற கட்சிகளுடன் கூட்டணியில் உள்ளது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் ஆனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய நேற்றைய தினமே கடைசி நாள் என அறிவித்த நிலையில் தமிழகத்தில் வேட்பாளர் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது .

dmk

தற்போது தமிழகத்தில் பல கட்சித் தலைவர்கள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு பகுதிகளில் சென்று அனைத்து பகுதிகளுக்கும் சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.திமுக சார்பில் திமுக கட்சி தலைவர் மு க ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டார்.

 திமுக சார்பில் திருவண்ணாமலை தொகுதியில் வேலு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என கட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி அவர் அப்பகுதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். இன்று காலை முதலே அவர்  தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். அவர் திருக்கோவிலூர் ரோட்டிலும், திருவண்ணாமலை பகுதிகளிலும் சென்று தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார் மேலும் பழ வியாபாரியிடம் சென்று அவர்கள் குறையை கேட்டும் மேலும் அங்குள்ள ஒரு டீக்கடையில் சென்று டீ குடித்து பின்னர் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக செய்து வந்தார்.

From around the web