மக்களை கவரும் விதமாக பேசி வாக்கு சேகரிக்கும் திமுக வேட்பாளர்!

மக்களை கவரும் விதமாக சுவாரசியமாக பேசி வாக்கு சேகரிக்கும் திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலம்!
 

சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் நெருங்கிய நிலையில் அதற்காக தமிழகத்தில் முன்னேற்பாடுகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளில் தமிழகத்தில் பல கட்சிகள் பல்வேறு கூட்டணியுடன் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், தமிழகத்தில் ஆளும் கட்சியுடன் பாஜக மற்றும் பாமக கட்சி  கூட்டணி  வைத்துள்ளது.

dmk

எதிர்கட்சியான திமுக கட்சி கூட்டணி காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக போன்ற கட்சிகளை வைத்துள்ளது. இந்நிலையில் திமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார். மேலும் தமிழகத்தில் பல பகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார் ஆண்டி அம்பலம்.

அவர் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் பல்வேறு கிராமங்களுக்கு சென்று சுவாரஸ்யமாக பேசி வாக்கு சேகரித்து வந்தார். அவர் கூறினார் உதயசூரியன் சின்னம் அறியும் அளவுக்கு வாக்களிக்க வேண்டுமெனவும் கூறினார். மேலும் கோவிலுக்குகாப்பு கட்டுவது போல்போல் 15 நாட்கள் அயராது தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும் எனவும் அப்பகுதி தொண்டர்களிடம் அவர் கூறினார்.

From around the web