வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் ராமச்சந்திரன்!

அருப்புக்கோட்டை தொகுதிக்குட்பட்ட புளியம்பட்டி காந்தி மைதானம் உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் ராமச்சந்திரன்!
 
வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் ராமச்சந்திரன்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் பல கட்சிகளுடன் கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன. இதில் தமிழகத்தில் மிகவும் வலிமையான எதிர்க் கட்சியாக உள்ள திமுகவானது தன்னுடன் கூட்டணியாக கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மதிமுக, விசிக போன்ற கட்சிகளை வைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன.

dmk

 திமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார். மேலும்  அவர் தமிழகம் முழுவதும் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவர் தனது கட்சி மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் திமுக சார்பில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தொகுதியில் வேட்பாளராக ராமச்சந்திரன் அறிவிக்கப்பட்டார்.

அருப்புக்கோட்டை தொகுதி திமுக வேட்பாளர் ராமச்சந்திரன் இன்று காலையில் திறந்த வாகனத்தின் மூலம் அருப்புக்கோட்டை பகுதிக்கு உட்பட்ட புளியம்பட்டி காந்தி மைதானம் போன்ற பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டார். அப்போது அவர் மக்களை பார்த்து கூறினார், உங்களைப் பார்க்கும்போது மிகவும் சந்தோஷமாக உள்ளது, உங்களைப் பார்க்கும்போது சொந்தக்காரர்கள் போல் உள்ளது எனவும் கூறினார். மேலும் அவர், உங்களுடன் 45 ஆண்டுகளாக உள்ளேன் என்றும் அவர் கூறினார். திமுக தேர்தல் வாக்குறுதிகளை கூறியும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

From around the web