தேர்தல் பிரச்சாரத்தில் எட்டு மாத குழந்தைக்கு பெயர் சூட்டிய திமுக வேட்பாளர்!

மனச்சநல்லூர் திமுக வேட்பாளர் கதிரவன் பிரச்சாரத்தில் எட்டு மாத குழந்தைக்கு தன் மகளின் பெயரை வைத்தார்!
 
தேர்தல் பிரச்சாரத்தில் எட்டு மாத குழந்தைக்கு பெயர் சூட்டிய திமுக வேட்பாளர்!

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் பல கட்சிகளுடன் கூட்டணி உள்ளது. இதில் ஆளும் கட்சி அதிமுக, பாமக கட்சியுடன் கூட்டணி. மேலும் இந்திய தேசிய கட்சியான பாஜக கட்சியுடனும் கூட்டணி உள்ளது. எதிர்கட்சியான திமுக காங்கிரஸ் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும் கூட்டணியில் உள்ளது.

dmk

ஏனெனில் பல கட்சிகளும் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில் வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்கள்.  எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் கொளத்தூர் தொகுதி அவரது மகனான உதயநிதி சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் அதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்த நிலையில் திமுக சார்பில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதியில் கதிரவன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் அவர் இன்று சமயபுரம் டோல்கேட் பகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஒரு பெண்மணி 8மாத குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டுமென்று என்று கூறினார். மேலும் அவரது ஆசையை ஏற்று திமுக வேட்பாளர் பெயர் வைத்தார். மேலும் திமுக வேட்பாளர் அவரது குழந்தையின் பெயரை வைத்தார்.

From around the web