பூத் ஸ்லிப் உடன் பணம் கொடுத்த திமுகவினர் கைது! 73 ஆயிரம் ரூபாய் பறிமுதல்!

கோவையில் பூத் ஸ்லிப் உடன் பணம் கொடுத்த திமுகவினர் இரண்டு பேர் கைது!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்று காலை தொடங்கியது. அதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வாக்கு பதிவானது மிகவும் வேகமாக நடைபெறுகிறது. தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. இந்த 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதற்காக தமிழகத்தில் தேர்தல் வேலைகளில் மிகவும் தீவிரமாக நடைபெறுகிறது.

tamilnadu

மேலும் தமிழகத்தில் காலை முதலே வாக்குப்பதிவு நடைபெறுகிறது.மேலும் வாக்காளர்கள் பலரும் வரிசையில் நின்று தமது வாக்கினை பதிவு செய்கின்றனர். மேலும் அவர்கள் சமூக இடைவெளி விட்டு நிற்கின்றனர். அவர்களுக்கு முகக்கவசம், கையுறை போன்றவை வழங்கபடுகிறது .மேலும் அவர்களின் உடல்நிலை  பரிசோதிக்கப்பட்டு வாக்குப்பதிவு செலுத்த அனுமதிக்கின்றனர். தேர்தல் அதிகாரிகள் தங்களது வேலையில் கவனம் செலுத்துகின்றனர்.

 தமிழகத்தில் பல பகுதிகளில் அசம்பாவிதங்களும் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து கோவையில் திமுகவினர் தற்போது கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  மேலும் அவர்கள் பூத் ஸ்லிப் உடன் பணம் வழங்கியதாக புகார் மேலும் கோவை கணபதி மணியகாரம் பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடி அருகே பூத் சிலிப் உடன் பணம் தந்த இரண்டு திமுகவினரை கைது செய்தனர். மேலும் அந்த இரண்டு திமுக பிரமுகர்கள் வெள்ளியங்கிரி, ரவி பாலு. மேலும் அவர்களிடம் இருந்து 73 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

From around the web