விவசாயிகளை சந்திக்க டெல்லி சென்ற திமுக கூட்டணி கட்சி எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தம்

 

டெல்லியில் மத்திய அரசின் புதிய வேளாண்மை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வட இந்திய விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர் 

இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்தும் தோல்வியில் முடிந்துள்ளது. இந்த நிலையில் இந்த போராட்டம் குறித்து தற்போது சர்வதேச பிரபலங்களும் பேச தொடங்கி விட்டதால் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

dmk mps

இந்த நிலையில் டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்க திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்பிக்கள் டெல்லி சென்றனர். டெல்லி காசிப்பூர் எல்லையில் போராடி வரும் விவசாயிகளை சந்திக்க சென்ற திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சிபிஎம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்பிக்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இதனால் திமுக கூட்டணி கட்சி எம்பிகளுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது என்பதும் இருப்பினும் போலீசார் அவர்களை அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

எதிர் கட்சி எம்பிக்கள் டெல்லி எல்லையில் தடுத்து நிறுத்த தமிழகத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

From around the web