திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டை முற்றுகையிட சென்ற தேமுதிகவினர்

காட்பாடியில் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டை முற்றுகையிட முயன்று மறியலில் ஈடுபட்ட தேமுதிகவினர் காட்பாடியில் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டை நேற்று முற்றுகையிடச் சென்ற தேமுதிக நிர்வாகிகளை போலீஸார் கைது செய்தனர். முன்னதாக துரைமுருகனுக்கு ஆதரவாக திமுகவினர் திரண்டதால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. திமுக பொருளாளர் துரைமுருகனுடன் தேமுதிக நிர்வாகிகள் இருதினங்ளுக்கு முன்பு கூட்டணிகுறித்து நடத்திய பேச்சுவார்த்தை மற்றும் அது தொடர்பாக துரைமுருகன் அளித்த பேட்டியும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதன் மூலம்
 

காட்பாடியில் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டை முற்றுகையிட முயன்று மறியலில் ஈடுபட்ட தேமுதிகவினர்

திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டை முற்றுகையிட சென்ற தேமுதிகவினர்

காட்பாடியில் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டை நேற்று முற்றுகையிடச் சென்ற தேமுதிக நிர்வாகிகளை போலீஸார் கைது செய்தனர். முன்னதாக துரைமுருகனுக்கு ஆதரவாக திமுகவினர் திரண்டதால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

திமுக பொருளாளர் துரைமுருகனுடன் தேமுதிக நிர்வாகிகள் இருதினங்ளுக்கு முன்பு கூட்டணிகுறித்து நடத்திய பேச்சுவார்த்தை மற்றும் அது தொடர்பாக துரைமுருகன் அளித்த பேட்டியும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதன் மூலம் ஒரே நேரத்தில் அதிமுக மற்றும் திமுகவுடன் கூட்டணி குறித்து தேமுதிக பேச்சுவார்த்தை நடத்திய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இதை ஊடகங்கள் மூலம் தெரியப்படுத்திய திமுக பொருளாளர் துரைமுருகனின் செயலுக்கு தேமுதிக சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், காட்பாடி காந்தி நகரில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகனின் வீட்டை வேலூர் மத்திய மாவட்ட தேமுதிகவினர் நேற்று முற்றுகையிட முயன்றனர். இதுகுறித்த தகவலின்பேரில் காட்பாடி ஓடைபிள்ளையார் கோயில் பேருந்து நிறுத்தப் பகுதியில் போலீஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். அங்கு தேமுதிக மத்திய மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் தலைமையில் சிலர், துரைமுருகனுக்கு எதிராக கோஷமிட்டனர்.

பின்னர், அவரது வீட்டை முற்றுகையிடச் சென்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால், போலீஸாருக்கும் தேமுதிகவினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்து வேனில் ஏற்றினர். அதேநேரம், துரைமுருகனுக்கு ஆதரவாக திமுகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கோஷமிட்டபடி தேமுதிகவினர் மறியலில் ஈடுபட்ட பகுதிக்குச் சென்றனர். இதனால் திமுக, தேமுதிகவினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. அதற்குள் தேமுதிக நிர்வாகிகள் அனைவரும் காவல் வாகனத்தில் ஏற்றப்பட்டனர். காவல் வாகனத்தைச் சுற்றி நின்றபடி திமுகவினர் கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

From around the web