மீட்பு பணியில் விபரீதம்: 4 பேர் பலி?

 
fell in well

மத்திய பிரதேச மாநிலத்தில் விதிஷா என்ற மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி திடீரென தவறி கிணற்றில் விழுந்து விட்டார். அவரை காப்பாற்றுவதற்காக தகவல் அறிந்த மீட்பு படையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு விரைந்தனர்

அவர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கிணற்றைச் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனர். அப்போது பொதுமக்களின் பாரம் தாங்காமல் கிணற்றின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததால் 40 பேர் வரை கிணற்றுக்குள் விழுந்து விட்டனர். இதில் 16 பேர்கள் தற்போது மீட்கப்பட்டு விட்டதாகவும் மற்றவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது 

இந்த சம்பவத்தில் இதுவரை 4 பேர் பலியானதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 8 வயது சிறுமியை காப்பாற்றுவதற்காக மீட்புப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த போது அதே கிணற்றில் 40 நபர்கள் விழுந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web