நிவாரணத் தொகையில் ஏமாற்றம் பாதிக்கப்பட்ட குடும்பம் அதிர்ச்சி!

சாத்தூரில் நடைபெற்ற வெடி விபத்திற்கான நிவாரணத் தொகை வழங்கிய காசோலையில் பணமில்லாமல் தால் அதிர்ச்சியில் திரும்பினர்!
 
நிவாரணத் தொகையில் ஏமாற்றம் பாதிக்கப்பட்ட குடும்பம் அதிர்ச்சி!

தீபாவளி என்றாலே அனைவருக்கும் நினைவு வருவது பட்டாசு வெடிகள் தான். இந்த பட்டாசு கடைகளில் தமிழகம் மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்தியாவிற்கும்  தயாரிக்கப்படும் பகுதியாக காணப்படுகிறது சிவகாசி. சிவகாசி பட்டாசு தொழிலை வாழ்வாதாரமாக கொண்டு அங்கு பட்டாசு தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இங்கு தயாரிக்கப்படும் இந்தியா மட்டுமின்றி உலகமெங்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சிவகாசியில் பட்டாசு தொழிலோடு பட்டாசு தொழிலில் பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக காணப்படுவது மிகுந்த சோகத்தை அளிப்பதாக காணப்படுகிறது.

sattur

மேலும் சிறு தீப்பொறி பட்டால் கூட அங்கு உள்ளபட்டாசு ஆலைகளில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். மேலும் இந்த பாதிப்பானது பல உயிர்களையும் வாங்கிக் கொள்ளும் அளவிற்கு ஏற்படும் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும். இத்தகைய சிறப்பினையும் அச்சத்திலும் கொண்ட சிவகாசி   விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது. மேலும் விருதுநகர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களிலும் பட்டாசு ஆலைகள் உள்ளன. அதன்படி விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் உள்ள அச்சம் குளத்தில் பட்டாசு ஆலை உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்த பட்டாசு ஆலையில் பிப்ரவரி 12ம் தேதி வெடி விபத்து நடைபெற்று அதில் 27 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை தள்ளியது.

பட்டாசு ஆலை நிவாரணமாக 5 லட்ச ரூபாய்க்கான காசோலையை கொடுத்திருந்தது. மேலும் அந்த நிவாரணமாக வழங்க 5லட்சம் காசோலையில் பணம் இல்லாததால் உறவினர்கள் அதிர்ச்சியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் நிவாரணம் வழங்குவதாக கூறி பணம் இல்லாத காசோலை வழங்கிய பட்டாசு ஆலை மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

From around the web