திண்டுக்கல் லியோனிக்கு திமுகவில் புதிய பதவி!

 

சமீபத்தில் திமுகவின் பொதுச்செயலாளராக துரைமுருகன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டார் என்பது தெரிந்ததே. இதனை அடுத்து கொள்கை பரப்புச் செயலாளராக பணிபுரிந்து வந்த ஆ ராசா மற்றும் திருச்சி சிவா ஆகியவர்கள் துணை பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர் 

இந்த நிலையில் தற்போது திமுகவின் புதிய கொள்கை பரப்புச் செயலாளர்களாக இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி புதிய கொள்கை பரப்புச் செயலாளராக திண்டுக்கல் லியோனி மற்றும் சபாபதி மோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

திண்டுக்கல் லியோனிக்கு திமுகவின் முதல் முறையாக பெரிய பதவி கொடுக்கப்பட்டிருப்பது அவரது தரப்பினர் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து திமுக தலைமை வெளியிட்ட அறிக்கை இதோ:

From around the web