திக் திக் திக்: அரை மணி நேரம் மட்டுமே பயன்படுத்த முடியும்!வேதனையில் முதல்வர்;

டெல்லியில் பல மருத்துவமனைகளில் அரை மணி நேரம் மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஆக்சிஸ் உள்ளதாக டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்!
 
திக் திக் திக்: அரை மணி நேரம் மட்டுமே பயன்படுத்த முடியும்!வேதனையில் முதல்வர்;

இந்தியாவின் தலைநகரமாக உள்ளது டெல்லி. டெல்லி மாநகரமானது உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் பெற்றுள்ளது. மேலும் டெல்லியில் உச்ச நீதிமன்றம் உள்ளது. மேலும் பல சிறப்பம்சங்களையும் டெல்லி பெற்றுள்ளது. இத்தகைய பெருமைகளையும் சேர்த்துள்ள டெல்லியில் தற்போது கண்ணுக்கே தெரியாமல் வலம் வரும் ஆட்கொல்லி நோயின் தாக்கம் ஆனது மிகவும் அதிகமாக காணப்படுவதே மக்களுக்கு வேதனை அளிக்கிறது. மேலும் அங்கு சில மாதங்கள் முன்பாக காற்று மாசுபாடு நிலவியிருந்தது கூறப்படுகிறது. தற்போது இந்த கொரோனா நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படுவது அங்குள்ள மக்களை மேலும் இன்னலுக்கு ஆளாகி உள்ளது.

government

டெல்லியில் முதல்வராக உள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். அவர் சில வாரங்களுக்கு முன்பாக டெல்லியில் பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளார், மேலும் மறு உத்தரவு வரும் வரை திறக்கப்படாது என்றும் கூறியிருந்தார். சில தினங்களுக்கு முன்பாக அவர் டெல்லியில் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார். அதன்படி  ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின் அதற்கு மறுநாளே அவர் டெல்லி மாநகரம் முழுவதும் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் அறிவித்திருந்தார்.

டெல்லியில் கொரோனா  அதிகரிப்பது மட்டுமின்றி ஆக்சிசன் பற்றாக்குறையும் அதிகரித்துள்ளதே மேலும் பல மருத்துவமனைகளில் ஆக்சிசன் இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசிடம் சில கோரிக்கைகளை வைத்துள்ளார். அதன்படி டெல்லியில் பல மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள ஆக்சிசன் தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு உதவ வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை வைத்துள்ளார்.

ஆக்சிசன்  உள்ள பல மருத்துவமனைகளில் அரை மணி நேரம் மட்டுமே பயன்படுத்தக்கூடியஆக்சிசன்  உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். டெல்லிக்கு வரும் ஆக்சிசன் லாரிகளை மாநில அரசுகள் தடுக்க கூடாது எனவும் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஒரு பேரழிவை ஏற்பட்டுவிடும் என்று பிரதமருடனான ஆலோசனையில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியிருந்தார். மேலும் உயிருக்கு போராடும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இயலவில்லை எனவும் அரவிந்த் கெஜ்ரிவால் வேதனை அடைந்துள்ளார்.

From around the web