இந்த கொரோனா முதல்வரையும் விட்டு வைக்கலையா?வீட்டில் தனிமை!

உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவுக்கு  கொரோனா உறுதியான தகவல்!
 
இந்த கொரோனா முதல்வரையும் விட்டு வைக்கலையா?வீட்டில் தனிமை!

மக்கள் மத்தியில் கண்ணுக்குத் தெரியாமல் பல்வேறு இன்னல்களை கொடுத்து வந்துள்ள ஒரு வைரஸ் கிருமி கொரோனா வைரஸ்.இந்தக் கொரோனா வைரஸ் ஆனது மனிதருக்கே தெரியாமல் மனிதருக்குள் சென்று மனிதனை பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக்குகிறது. நமது நட்பு நாடான சீனாவில் உள்ள ஒரு மாகாணத்தில் கொரோனா கண்டறியப்பட்டது .அதன்பின்னர் சீன நாடு முழுவதும்  விரைவாக பரவியது. இதன் பின்னர் உலக நாடுகளில் பரிசோதித்த பின்னர் உலக நாடுகள் அனைத்திலும் இந்நோயின் தாக்கம் இருந்தது தெரியவந்தது.

corona

மேலும் கடந்த ஆண்டில் இந்தியாவிலும் கொரோனா நோய் பரவ தொடங்கியது. ஆனால் இந்திய அரசானது எல்லா நாடுகளும் கையிலெடுக்க தயங்கிய முழு ஊரடங்கு திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தியது. அதன் பின்னர் கடந்த ஆண்டின் இறுதியில் இந்த நோயின் தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஆனால் சில நாட்களாக இந்த நோயின் தாக்கம் வீரியம் உள்ளதாக உருவெடுத்துள்ளது. மேலும் இந்தியாவில் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு மாநிலங்களில் இந்நோயின் தாக்கம்  கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பரவுகிறது வேதனை அளிக்கிறது.

குறிப்பாக தமிழகம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் இந்நோயின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் தற்போது முதல்வர் ஒருவருக்கும் கொரோனா நோய் உறுதியாகிறது. அதன்படி உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு ஒரு உறுதியாகி உள்ளது. மேலும் கொரோனா பாதிக்கப்பட்ட அகிலேஷ் யாதவ் தன்னை வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.மேலும்  அகிலேஷ் யாதவ் சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web