ஹோட்டலில் சாப்பிட்டது குத்தமா? லத்தியால் அடி!காட்டூர் காவலர் காட்டுத்தனமான அடி !

கோவை காந்திபுரம் வெளியூர் பேருந்து நிலையம் உள்ள ஓட்டலில் சாப்பிட வந்தவர்களுக்கு லத்தி அடி!
 
ஹோட்டலில் சாப்பிட்டது குத்தமா? லத்தியால் அடி!காட்டூர் காவலர் காட்டுத்தனமான அடி !

தமிழகத்தில் சில வாரங்களாக ஆட்கொல்லி நோய் ஆகிய கொரோனா  தாக்கம் தலைவிரித்தாடுகிறது.தமிழகத்தில் குறிப்பாக சென்னை மதுரை கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களில் கொரோனா அதிகரித்துள்ளது.இந்நிலையில் தமிழக அரசானது சில தினங்களுக்கு முன்பு கட்டுப்பாடுகள் தடைகள் ,தளர்வுகள் போன்றவற்றை அறிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் மதசார்பு ஊர்வலங்கள், கோவில் திருவிழாக்கள் போன்றவற்றுக்கு தடைவிதித்துள்ளது.

gandhipuram

மேலும் சினிமா திரையரங்குகளில் பார்வையாளருக்கு 50% இடம் மட்டுமே அனுமதித்துள்ளது. மேலும் கோவில்களில் 8 மணிக்கு மேல் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கவில்லை. மேலும் திருமண நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு மேல் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் இறுதி ஊர்வல ஊர்வலத்தில் 50 பேருக்கு மேல் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து ஹோட்டல் இரவு பதினொரு மணிக்கு மேல் இயங்க தடை விதித்துள்ளது. இந்நிலையில் ஹோட்டல் ஒன்றில் சாப்பிட வந்தவர்களுக்கு லத்தியால் காவல்துறையின் அடித்தது அனைவரையும் அதிர்ச்சி அளித்துள்ளது.

அதன்படி கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் இரவு 10 மணிக்கு மேல் ஓசூர் பயணிகள் சிலர் சாப்பிட வந்தனர். அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது காட்டூர் காவல் உதவி ஆய்வாளர் முத்து லத்தியால் ஹோட்டலில் வந்தார். அப்பொழுது சாப்பிட்டு இருந்த அனைவரையும் லத்தியால் அடித்தார். மேலும் அங்குள்ள பெண்ணுக்கு தலையில் அடியும், வயதான ஒருவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காட்டூர் காவலர்களின் காட்டுத்தனமான அடி சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புகள் அதிகரித்து வருகின்றன.

பெண்ணென்று பாராமலும் அடித்ததால் சமூக வலைதளங்களில் மக்கள் கொதித்து இருந்துள்ளனர். இந்த காட்சிகள் அனைத்தும் உணவகத்தில்  இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் கடைகளை மூடுவதற்கு 11மணி  என்ற நிலையில் அவர்கள் முன்னதாக சாப்பிட்டு வந்தாலும் அடி குறிப்பாக லத்தியால் அடிபட்டது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web