முக ஸ்டாலினை வயலில் புகைப்படம் எடுத்தவர் சேற்றில் விழுந்தாரா?

 

மத்திய அரசின் விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டம் நடத்தினர் என்பது தெரிந்ததே 

குறிப்பாக திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் காஞ்சிபுரத்தில் வயலில் இறங்கி திடீரென போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 

திமுக தலைவர் முக ஸ்டாலின் வயல் வரப்புகளில் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு நடந்து சென்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது 

இந்த நிலையில் திமுக தலைவரை வயலில் போட்டோ எடுக்கச் சென்ற புகைப்படக்காரர் ஒருவர் சேற்றில் விழுந்த தகவல் தற்போது புகைப்படத்துடன் வைரலாகி வருகிறது 

சேற்றில் விழுந்த அவரை சக புகைப்பட கலைஞர்கள் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் தூக்கி உட்கார வைத்துக் கொண்டிருப்பது போன்ற இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web