உடன்கட்டை ஏறினாரா கல்லூரி மாணவியின் காதலர்? பரபரப்பு தகவல் 

உளுந்தூர்பேட்டை அருகே மூன்று சகோதரிகளிடையே செல்போனை பயன்படுத்துவது யார் என்ற சண்டையில் நித்யஸ்ரீ என்ற கல்லூரி மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 

இதனை அடுத்து ஆன்லைன் வகுப்புகளால் இம்மாதிரி உயிர்சேதம் ஏற்படுவதாகவும் உடனடியாக ஆன்லைன் வகுப்புகள் தடை செய்ய வேண்டும் என்றும் திமுக உள்பட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன 

இந்த நிலையில் விஷமருந்தி இறந்த கல்லூரி மாணவி நித்யஸ்ரீ நேற்று எரியூட்டப்பட்டபோது, அந்த நெருப்பில் கல்லூரி மாணவர் ஒருவர் குதித்து உடன்கட்டை ஏறி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது 

நித்யஸ்ரீ என்ற கல்லூரி மாணவியை அவர் ஒருதலையாகக் காதலித்ததாகவும், இதனையடுத்து தனது காதலி இறந்த செய்தி அறிந்ததும் அவரும் உடன்கட்டை ஏறி தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது இது குறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்

From around the web