பொதுச்செயலாளரின் முக்கிய அதிகாரத்தை தட்டிப்பறித்தாரா முக ஸ்டாலின்?

திமுகவின் அடுத்த பொதுச்செயலாளராக துரைமுருகன் நேற்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பொறுப்பேற்று கொண்ட நிலையில் பொதுச்செயலாளருக்குரிய முக்கிய அதிகாரம் ஒன்று அக்கட்சியின் தலைவருக்கு மாறியுள்ளது

திமுகவின் அடுத்த பொதுச்செயலாளராக துரைமுருகன் நேற்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பொறுப்பேற்று கொண்ட நிலையில் பொதுச்செயலாளருக்குரிய முக்கிய அதிகாரம் ஒன்று அக்கட்சியின் தலைவருக்கு மாறியுள்ளது

திமுகவில் துணைப்பொதுச்செயலாளரை நியமிக்கும் அதிகாரம் கட்சியின் தலைவரான ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை திமுக துணைப்பொதுச்செயலாளர்களை கட்சியின் பொதுச்செயலாளர் நியமித்து வந்த நிலையில் தற்போது கட்சியின் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே இனி திமுக தலைவர் தான் துணைப்பொதுச்செயலாளரை நியமனம் செய்வார்

இந்த சட்டத்திருத்தத்தால் தான் நேற்று பொதுக்குழுவில் பொன்முடி, ஆ.ராசா ஆகிய இருவரும் துணைப்பொதுச்செயலாளராக திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் திமுகவில் பழங்குடியினர் துணைப்பொதுச்செயலாளராக நியமனம் செய்யவும் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆதிதிராவிடர், மகளிர், பொதுப்பிரிவை சேர்ந்தவர்கள் ஏற்கெனவே துணைப்பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web