சீமானிடம் திடீரென போனில் பேசினாரா ரஜினிகாந்த்: பரபரப்பு தகவல்

 

ரஜினிகாந்த் பெயரை கேட்டாலே சீமான் ஆவேசமாக மாற்றி விடுவார் என்பதும் குறிப்பாக ரஜினியின் அரசியல் வருகை குறித்து சீமானை போல் கடுமையாக விமர்சனம் செய்தவர் யாருமில்லை என்பதும் தெரிந்ததே 

ஆனால் கடந்த சில நாட்களாக சீமானின் நடவடிக்கையில் திடீரென மாற்றம் ஏற்பட்டுள்ளது. ரஜினி வேறொருவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்து விட்டதால் அவருடனான முரண் நீங்கியது என்று சீமான் தெரிவித்துள்ளார் 

மேலும் ரஜினியை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றும் அவர் மராட்டியத்தின் அரசியல் செய்ய சென்றால் ஆதரிக்கும் முதல் நபராக நான் இருப்பேன் என்றும் ஆனால் தமிழகத்தில் அவரை ஆட்சி செய்ய விடமாட்டேன் என்றும் கூறிவந்தார் 

இந்த நிலையில் திடீரென கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் நலமின்றி சீமான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அப்போது ரஜினி சீமானுக்கு போன் செய்து நலம் விசாரித்ததாகவும் உடல் நலனை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள் என்று ரஜினிகாந்த் கூறியதாகவும் செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன

சீமானுக்கு ரஜினிகாந்த் போன் செய்தார் போன் செய்து நலம் விசாரித்த விவகாரம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது

From around the web