ஒகேனக்கலில் பயங்கரம்- வாலிபரை சுட்டுக்கொன்ற கொடூர வேட்டைக்காரர்கள்

தர்மபுரி ஒகேனக்கல் பகுதியில் நடந்த சம்பவம் பலரை அலற வைத்துள்ளது. தர்மபுரி அருகே ஜருகு குரும்பட்டியான் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. கோவையில் மெக்கானிக்காக பணிபுரியும் இந்த 27 வயது இளைஞர்.ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தை சேர்ந்த தனது அக்கா மகளுடன் ஒகேனக்கல் சென்று விட்டு வரும் வழியில் பண்ணைப்பட்டி வனப்பகுதியில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த கொடூர வேட்டைக்கும்பல் ஒன்று அந்த மாணவியிடம் வம்பிழுக்க தட்டி கேட்ட முனுசாமியை வேட்டை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளனர். இதுகுறித்த தகவலின்
 

தர்மபுரி ஒகேனக்கல் பகுதியில் நடந்த சம்பவம் பலரை அலற வைத்துள்ளது. தர்மபுரி அருகே ஜருகு குரும்பட்டியான் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. கோவையில் மெக்கானிக்காக பணிபுரியும் இந்த 27 வயது இளைஞர்.ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தை சேர்ந்த தனது அக்கா மகளுடன் ஒகேனக்கல் சென்று விட்டு வரும் வழியில் பண்ணைப்பட்டி வனப்பகுதியில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த கொடூர வேட்டைக்கும்பல் ஒன்று அந்த மாணவியிடம் வம்பிழுக்க தட்டி கேட்ட முனுசாமியை வேட்டை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளனர்.

ஒகேனக்கலில் பயங்கரம்- வாலிபரை சுட்டுக்கொன்ற கொடூர வேட்டைக்காரர்கள்

இதுகுறித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட எஸ்பி ராஜன், பென்னாகரம் டிஎஸ்பி மேகலா ஆகியோர் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக, ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிந்து, தப்பியோடிய மர்ம கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே, விசாரணையில் வாலிபரை சுட்டுக்கொன்றது வேட்டைக்கும்பலாக இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. 

பண்ணப்பட்டியைச் சேர்ந்த ஒருவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அந்த நபர் மீது, வனவிலங்குகளை வேட்டையாடி இறைச்சியை விற்பனை செய்ததாக வழக்கும் உள்ளது. மேலும், நாட்டுத்துப்பாக்கிகளை வாங்கி, வேட்டைக்காரர்களுக்கு விற்பனை செய்தும் வந்துள்ளார். இதையடுத்து, அவரது வீட்டிற்கு போலீசார் சென்ற போது, அவரை காணவில்லை. 

தொடர்ந்து அவர் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த நபருக்கு சுமார் 35 வயது இருக்கும் என்றும் திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர் என்றும் போலீசார் தெரிவித்தனர். அவர்தான் கொலையாளி என்றும் அவருடன் இருந்தவர்கள் அவரது கூட்டாளிகள் என்றும் அவர் சைகோ போல எப்போதும் போதையில் இருப்பார் எனவும் போலீசார் கூறுகின்றனர்

From around the web