புதுச்சேரியிலும் கொரோனாவை தடுக்க கட்டுப்பாடு விதித்தார் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்!

கொரோனாவை பரவலை தடுக்க புதுச்சேரியிலும் நாளை முதல் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்!
 
புதுச்சேரியிலும் கொரோனாவை தடுக்க கட்டுப்பாடு விதித்தார் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஆனது ஆறாம் தேதி நடைபெற்றது. இந்த ஆறாம் தேதி 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று இருந்தது. மேலும் சட்டமன்றதேர்தல் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் நடைபெற்றது. புதுச்சேரியில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன.இந்த 30 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் சில வாரங்களாக கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது. தற்போது புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஆக தமிழிசை சவுந்தரராஜன்  உள்ளார்.

pudhucherry

அவர் தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளார். மேலும் புதுச்சேரியில் நாளை முதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன எனவும் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். அதன்படி புதுச்சேரியில் இரவு 12 மணி முதல் மாலை 5 மணி வரை கடும் கட்டுப்பாடு விதிக்க பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் புதுச்சேரியில் மக்கள் கூட்டம் கூட திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதுச்சேரியில் உள்ள தியேட்டர்களில் 50% ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாகவும் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். மேலும் புதுச்சேரியில் கோவில்கள் இரவு 8 மணி வரை மட்டும் தான் திறந்து இருக்கும் எனவும் துணைநிலை ஆளுநர் தமிழிசை கூறினார். மேலும் பேருந்துகளில் அதிக அளவில் பயணிகள் செல்லக் கூடாது எனவும், ஆட்டோ ,வாடகை கார்களில் இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கவும் அவர் கூறினார். மேலும் புதுச்சேரியில்  முக கவசம் போடவில்லை என்றால் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். 

From around the web