துணை முதல்வர் ஓபிஎஸ் சகோதரருக்கு கொரோனா உறுதி: அதிர்ச்சி தகவல்

கடந்த சில நாட்களாக பாமர மக்கள் மட்டுமின்றி பதவியில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களையும் கொரோனா வைரஸ் தாக்கி வருவது தெரிந்ததே ஏற்கனவே கொரோனா வைரஸால் தாக்கப்பட்ட சேப்பாக்கம் எம்.எல்.ஏ ஜெ அன்பழகன் அவர்கள் மரணம் அடைந்தார் அதன் பின்னர் ஸ்ரீபெரும்புதூரில் எம்.எல்.ஏ பழனி, ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன், செய்யூர் தொகுதி எம்எல்ஏ ஆர்டி அரசு, செஞ்சி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ மஸ்தான் என மொத்தம் 5 எம்எல்ஏக்கள் கொரோனா வைரஸால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
 
துணை முதல்வர் ஓபிஎஸ் சகோதரருக்கு கொரோனா உறுதி: அதிர்ச்சி தகவல்

கடந்த சில நாட்களாக பாமர மக்கள் மட்டுமின்றி பதவியில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களையும் கொரோனா வைரஸ் தாக்கி வருவது தெரிந்ததே

ஏற்கனவே கொரோனா வைரஸால் தாக்கப்பட்ட சேப்பாக்கம் எம்.எல்.ஏ ஜெ அன்பழகன் அவர்கள் மரணம் அடைந்தார் அதன் பின்னர் ஸ்ரீபெரும்புதூரில் எம்.எல்.ஏ பழனி, ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன், செய்யூர் தொகுதி எம்எல்ஏ ஆர்டி அரசு, செஞ்சி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ மஸ்தான் என மொத்தம் 5 எம்எல்ஏக்கள் கொரோனா வைரஸால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் சகோதரர் ராஜா அவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாலக தெரிகிறது. இதனை அடுத்து அவர் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

ஓ ராஜா அவர்கள் குடும்பத்தினரும் தற்போது தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர் என்றும், மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து விசாரிக்கப்படுவதாகவும் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துணை முதல்வரின் சகோதரரே கொரோனாவால் பாதிக்கப்பட்ட தகவல் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web